போனஸ் ஆசனங்களில் ஒன்றை மன்னாரில் இந்து மத உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாண சபைக்கான அமைச்சுப் பதவிகள் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை முஸ்லிம் உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவது தொட ர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. மற்றைய ஆசனத்தை சுழற்சி அடிப்படையில் வருடத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் வழங்குவது தொடர்பிலும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் நான்கு விடயங்கள் கருத்தில் கொள்ளப்படவுள்ளன.
அதாவது, முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை வரை உறுப்பினர் ஒருவர் இல்லாத நிலைமை காணப்படுகின்றது. அதேபோன்று மன்னாரில் இந்து மத உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் சார்பில் போதிய பங்களிப்பு இல்லாதிருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேபோன்று மலையகத் தமிழர் ஒருவருக்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும் கோரப்படுகின்றது. இவை யாவும் கருத்தில் கொள்ளப்படும்.
மேலும் நாளை திங்கட்கிழமை இது தொடர்பில் முடிவு எடுப்பதுடன் முதலமைச்சர் யார் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்வது என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கடந்த நான்கு ஆண்டு கால சர்வாதிகாரப் போக்கை ஏற்காத தமிழ் மக்களின் வாழ்வுரிமையையும் ஜனநாயக ரீதியான அடிப்படை உரிமைகளையும் அவர்களுடைய அரசியல் ஆட்சி உரிமையையும் ஏற்காத அரசுக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். இந்தத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்பதைவிட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வட மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு எதிராகவே வாக்களித்திருக்கின்றார்கள் என்பதே உண்மை.
அரசாங்கமும் சர்வதேச சமூகமும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாகாண சபைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அரசாங்கம் ஏற்கனவே பறித்தெடுத்துவிட்டது. வட மாகாண சபைத் தேர்தல் வந்ததும் பொலிஸ் அதிகாரங்களையோ காணி அதிகாரங்களையோ இந்த மாகாண சபைக்கு வழங்க மாட்டோம் என்று சிங்கள தீவிரவாத, பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் அறிக்கைகளை விடுப்பதைவிட போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் இந்த நாட்டில் ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு இணைந்த மாநிலத்தில் தன்னாட்சி அதிகாரம் மிக்க ஒரு மாநில ஆட்சியைக் கோருகின்றோம். இந்த கோரி க்கை சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்ற உள்ளக சேத உரிமைகள் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இன்று இருக்கும் ஒற்றையாட்சி அமைப்புக்குள் அதிகாரப் பகிர்வு என்பதற்கு அர்த்தமில்லை. இந்த அரசியலமைப்பு அதிகார பகிர்வை அனுமதிக்காது. இதைப் போலவே 13 ஆவது திருத்தச் சட்டமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர் வாக அமையாது. சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் குறிப்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உடன்பாடுகள் தொடர்பான அறிக்கைகளிலும் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்த முள்ள அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது என்றார்.
போனஸ் ஆசனங்களில் ஒன்றை மன்னாரில் இந்து மத உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Reviewed by NEWMANNAR
on
September 29, 2013
Rating:

No comments:
Post a Comment