வடமாகாண பல்கலைக்கழக மாணவர்கள் 37 பேருக்கு அமெரிக்க அமைப்பு உதவி (Photos)
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுவலுவுள்ளோர், விதவைகள் மற்றும் சிறுவர்களுக்குமான அமைப்பு (NOW WOW) மாதாந்தக் கொடுப்பனவு திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் முப்பத்தேழு (37) பேருக்கு இந்நிதியுதவித் திட்டத்தை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே வடமாகாண சபை உறுப்பினர் தம்பிராசா குருகுலராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் எமது சந்ததியின் எதிர்கால தூண்கள் நீங்கள், எதிர்காலத்தில் எமது இனத்தின் வழிகாட்டிகள். ஆகவே நீங்கள் உரிய முறையில் கல்வி கற்று எமது இனத்தின் விடிவிற்காக அறிவாற்றல் மூலம் போராட வேண்டியவர்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வானது கிளிநொச்சி மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் கரைச்சிப் பிரதேச சபையின் உப தவிசாளர் ஆகிய வடிவேல் நகுலேஸ்வரன் தலமையில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களான செல்லையா புஸ்பராசா, வேலுப்பிள்ளை செல்லத்துரை, மாரியப்பன் சுகந்தன், சின்னையா சுப்பையா, இ.சேதுபதி, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் செயலாளர் கு.சர்வானந்தா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வடமாகாண பல்கலைக்கழக மாணவர்கள் 37 பேருக்கு அமெரிக்க அமைப்பு உதவி (Photos)
Reviewed by Admin
on
September 29, 2013
Rating:

No comments:
Post a Comment