கலா நிதி சிவசிறி .சபா. மனோகரக்குருக்கள் அவர்களின் 62 ஆவது ஜனன தினம் இன்று-உருவச்சிலை திறந்து வைப்பு.படங்கள்
மன்னார் மாவட்ட இந்து மத குரு பிடாதிபதியாக இருந்து அமரத்துவம் அடைந்த கலா நிதி சிவசிறி .சபா. மனோகரக்குருக்கள் அவர்களின் 62 ஆவது ஜனன தினமான இன்று வெள்ளிக்கிழமை(06-09-2013) அன்னாரது உருவச்சிலை கலாநிதி மனோகரக்குருக்கள் நற்பணி மன்றத்தினால் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-மன்னார் பொலிஸ் நிலையம் முன்பாக அமைக்கப்பட்ட குறித்த சிலை இன்று காலை 10 மணியளவில் சர்வமதத்தலைவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் நினைவு ஒன்று கூடலும் இடம் பெற்றது.
இதன் போது மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
-மன்னார் நிருபர்-
(6-09-2013)
கலா நிதி சிவசிறி .சபா. மனோகரக்குருக்கள் அவர்களின் 62 ஆவது ஜனன தினம் இன்று-உருவச்சிலை திறந்து வைப்பு.படங்கள்
Reviewed by NEWMANNAR
on
September 06, 2013
Rating:
No comments:
Post a Comment