மன்னார், 'நம்பிக்கை மழலைகள் பயிலகம்' நடாத்திய சிறுவர் தினவிழாவிலே 'சிவன்அருள் இல்லத்தை' ச் சேர்ந்த நான்கு வயதான செல்வன் தர்சன் கௌரவிக்கப் பட்டார்.
மன்னார், 'நம்பிக்கை மழலைகள் பயிலகம்' நடாத்திய சிறுவர் தினவிழாவிலே பிரதம விருந்தினர்களில் ஒருவராக திருக்கேதீச்சரம் 'சிவன்அருள் இல்லத்தை' ச் சேர்ந்த நான்கு வயதான செல்வன் தர்சன் அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப் பட்டார்.
'நான்கு வயதிலேயே இச் சிறுவனுக்குள்ள அறிவையும் மிகச்சிறந்த நினைவாற்றலையும், தமது மழலைகள் பயிலகத்தில் பயிலும் சிறுவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி, அவர்களையும் உற்சாகப் படுத்தும் முகமாகவே அவரை பிரதம விருந்தினராக அழைத்ததாக' நம்பிக்கை மழலைகள் பயிலக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இச்சிறுவன் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்றவற்றை மனப்பாடமாக ஒப்புவிப்பதுடன் பன்னிரண்டாம் வாய்ப்பாடு வரை சுயமாக அவற்றினை மனப்பாடம் செய்து எப்படிக் கேட்டாலும் சரியாக ஒப்புவிக்குமளவுக்கு அபார நினைவாற்றல் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வைபவம் தொடர்பான படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
மன்னார், 'நம்பிக்கை மழலைகள் பயிலகம்' நடாத்திய சிறுவர் தினவிழாவிலே 'சிவன்அருள் இல்லத்தை' ச் சேர்ந்த நான்கு வயதான செல்வன் தர்சன் கௌரவிக்கப் பட்டார்.
Reviewed by Admin
on
October 19, 2013
Rating:
No comments:
Post a Comment