யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் வழங்கும் திட்டம் அதன் சாதக பாதக நிலமைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்படும்: முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன்- படங்கள்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கும் திட்டம், அது தொடர்பான நன்மை, தீமைகளை ஆராய்ந்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பை வடக்கு மாகாண சபை ஏற்கின்றது என்று கிளிநொச்சியில் நடைபெற்ற இத்திட்டம் தொடர்பான கருத்தரங்கில் முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதித் திட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள இரணைமடுக் குளத்தின் கீழான யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான குடிநீர் வழங்கல் திட்டம் தொடர்பான கருத்தரங்கு இன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலமையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் வடக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சகல தரப்பினரையும் கருத்தில் கொண்டு ஒரு சுமுகமான அணுகுமுறைகளினுடக இத் திட்டம் பரிசீலிக்கப்படும்.
இது தொடர்பாக எமது வடக்கு மாகாண சபை சரியான முடிவுகளை எடுக்கும் ஏன்னென்றால் எமது பிரதேசங்களுக்கான நன்மை கிடைக்கக் கூடிய திட்டங்களை நாம் கட்டாயம் அமுல்படுத்த வேண்டும்.
இந்த கருத்தரங்கில் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில்,
குடிநீர் மாசுபடுதல், சுற்றுச்சூழல் மாசுபடுதல் என்பது எமது பிரதேசங்களில் மட்டுமல்ல இது உலகம் பூராகவும் உள்ளது. இவ்வறான மாசுபடுதல்களை எங்களுடைய பிரதேசங்களில் தடுப்பதற்கு உள்ளூராட்சி சபைகள் சரியான வழிவகைகளை கையாள வேண்டும். ஆகவே இத் திட்டம் தொடர்பாக வடக்கு மாகாண சபை குறித்த காலத்தில் சரியான முடிவை எடுக்கும் என்றார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், ஈ. சரவணபவன், வடக்கு மாகாண அமைச்சர்களான த. குருகுலராசா, பொ. ஐங்கரநேசன், ப. சத்தியலிங்கம், பி. டெனீஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சி.வி.கே. சிவஞானம் ப. அரியரத்தினம்,சு. பசுபதிப்பிள்ளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் இத் திட்டத்திற்கான ஆலோசகர் திருவாளர் குருஸ், பேராசிரியரும் இத் திட்டத்திற்கான ஆலோசகருமான திருவாளர் நந்தகுமார், இத் திட்டத்திற்கான பொறியியலாளர் திருவாளர் பாலசிங்கம், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், கமக்கார அமைப்புக்களின் தலைவர்கள், புத்திஜீவிகள், பெருமளவான விவசாயிகள், அபிமானிகளும் என பலரும் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி குடிநீர் வழங்கும் திட்டம் அதன் சாதக பாதக நிலமைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கப்படும்: முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன்- படங்கள்
Reviewed by Admin
on
October 20, 2013
Rating:
No comments:
Post a Comment