அண்மைய செய்திகள்

recent
-

எங்கள் கலைகளைக் காத்து எம்மண்ணின் தலைவர்களாக விளங்க வேண்டும்: முல்லை. சிறுவர் விழாவில் வடமாகாண உறுப்பினர் ரவிகரன் - படங்கள்

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான சேவ் த சில்ரன் (save the children) அமைப்பின் ஏற்பாட்டில் சிறுவர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமான விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும், சிறப்பு விருந்தினர்களாக முல்லை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகாரி ரஜனிகாந்த் அவர்களும் போதகர் ச.ஜோசப் ஜெகநாதன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வை ஜ.தர்சிகரன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வருகின்றார். வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. அவர் தனது உரையில், விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவில் யுத்தத்திற்கு பிற்பட்ட சூழலில், இது போன்ற சிறுவர் கலைவிழாக்கள் நடத்தப்படுவதை நான் நன்றியுடன் வரவேற்கிறேன்.

இது போன்ற விழாக்கள், எதிர்கால தலைவர்களான இளஞ்சிறார்களின் உள மேம்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக இருப்பதோடு, எதிர்கால சமூகத்தில், அவர்கள் ஆரோக்கியமான சமூக பிரஜைகளாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

அது மட்டுமல்லாமல் இவ்விழாக்கள் மூலமாக எம் கலாசாரமும் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது.

"எங்கள் கலைகளைக் காத்து எம் மண்ணின் தலைவர்களாக விளங்க வேண்டும்" என்றார். அதன் பின் சிறுவர்களின் தனி பாடல், பேச்சு, தனி நடனம், குழு நடனம், நடாகம் உள்ளிட்ட நிகழ்வுகள் பெருந்திரளான மக்கள் பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன.







எங்கள் கலைகளைக் காத்து எம்மண்ணின் தலைவர்களாக விளங்க வேண்டும்: முல்லை. சிறுவர் விழாவில் வடமாகாண உறுப்பினர் ரவிகரன் - படங்கள் Reviewed by Admin on October 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.