அண்மைய செய்திகள்

recent
-

பெப்சி, கோக்குக்குத் தடை விவசாய அமைச்சர் அதிரடி

வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ "பெப்சி', "கொக்கா கோலா' போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக அறிவித்தார் ஐங்கரநேசன். 

 விவசாயமும், கமநலசேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல் அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

 அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலேயோ அல்லது கலந்துரையாடல்களிலோ "பெப்சி' கொக்ககோலா' போன்ற மென்பானங்கள் பயன்படுத்த வேண்டாம். எமது பணம் வெளியிடங்களுக்குச் செல்லும் நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது.

 இயலுமானவரை இவ்வாறான குளிர்பானங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் எமது பணம் எமக்குள்ளேயே சுழற்சியுடன் நின்று கொள்ளும். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் தயாரிப்பில் உருவான பழரசங்களைப் பயன்படுத்த வேண்டும் - என்று கூறினார்.


பெப்சி, கோக்குக்குத் தடை விவசாய அமைச்சர் அதிரடி Reviewed by Admin on October 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.