நாடெங்கும் மின்னல் தாக்கம்: டிசம்பர் வரை நீடிக்கும்
காலநிலை மாற்றம் காரண மாக டிசம்பர் முதல் வாரம் வரையி லான காலப்பகுதியில் நாடு முழுவதும் மின்னல் தாக்கம் கடுமையாக காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இடைப் பருவப் பெயர்ச்சியுடன் கூடிய காலநிலையே தற்போது நிலவி வருகின்றது. இதன்போது, மழையுடன் மின்னல் தாக்கமும் கடுமையாக காணப்படுமென சுட்டிக்காட்டிய வானிலை கடமைநேர அதிகாரி, வருடந்தோறும் இக்காலப் பகுதியிலேயே மின்னல் தாக்கத்தினால் பாதிப்படைவதுடன் உயிரிழப்பதாகவும்,
எனவே, பொதுமக்கள் இக்காலப் பகுதியில் மின்னல் தாக்கம் குறித்து கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தின் போது மக்கள் வயல்வெளி, தோட்டம், மைதானம் போன்ற திறந்த வெளிகளில் நிற்பதனையும் திறந்த வாகனங்களில் பயணம் செய்வதனையும் அறவே தவிர்த்தல் வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையின்போது தனி மரங்களுக்குக் கீழ் ஒதுங்குதல் ஆகாது. அத்துடன் உலோகத்தினாலான பொருட்களை கையில் வைத்திருத்தலோ அல்லது அவ்வாறான பொருட்களுக்கு அண்மையில் நிற்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படப் போவதனை அறிந்ததும் பாதுகாப்பான கட்டடத்தின் கீழ் ஒதுங்குவது அவசியமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடெங்கும் மின்னல் தாக்கம்: டிசம்பர் வரை நீடிக்கும்
Reviewed by Admin
on
October 28, 2013
Rating:

No comments:
Post a Comment