மன்னார் மாவட்ட பிரதேச செயலக மற்றும் பிரதேச அபிவிருத்தியின் முதல் கட்டம் முசலியில்
புதிதாக வருகை தந்துள்ள மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் மிகவும் பெருமதி வாய்ந்த திட்டமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேச செயலகங்களையும ஒரு மாதத்திற்கு ஓரு முறை குறித்த பிரதேச செயலகத்திற்கு மன்னாரில் உள்ள அனைத்து திணைக்களங்களின் தலைவர்களையும் சேர்த்து அப்பிரதேசத்தில் உள்ள அபிவிருத்தி சம்மந்தமாகவும் குறைகள் பற்றியும் கலந்தாலோசனை மேற்கொள்வதுடன் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யும் திட்டத்தினை புதிய அரசாங்க அதிபர் தேசப்பிரிய முதல் கட்டமாக முசலி பிரதேசத்தில் ஆரம்பித்து வைத்தார்
மன்னார் மாவட்டத்திற்கு கடமையாற்றிய வேறு அரசாங்க அதிபர்கள் இவ்வாறான திட்டத்தினை அறிமுகம் செய்ய வில்லை என்பது குறிப்பிடதக்கது இவ்வாறான திட்டங்களை ஆரம்பிப்பதன் முலம்தான் பிரதேசங்களின் அபிவிருத்தியினை செய்ய முடியும் என்றும்
இந்த முசலி பிரதேசத்தில் உள்ள மக்களின் வறுமையினை போக்கும் முக்கியமான பணியினை புதிதாக நியமனம் பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகர்கள் செய்கின்றிர்கள் உங்களின் செயற்பாடுகள் திறன்பட இருந்தால்தான் மகிந்த சிந்தனை திட்டத்தினை வெற்றி பெற செய்ய முடியும் என்றார்
இன் நிகழ்வில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபர்.உதவி சமுர்த்தி ஆணையாளர்.கணக்காளர் மற்றும் முசலி பிரதேச செயலாளர் ஆகியோர் பிரசன்னமானர் மாலை 4 மணிக்கு நிகழ்வு நிடைவடைந்தது.
எஸ்.எச்.எம்.வாஜித்
மன்னார் மாவட்ட பிரதேச செயலக மற்றும் பிரதேச அபிவிருத்தியின் முதல் கட்டம் முசலியில்
Reviewed by Admin
on
October 26, 2013
Rating:

No comments:
Post a Comment