அண்மைய செய்திகள்

recent
-

ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்க போராட்டம்; யாழ். பல்கலையில்

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வந்த பணியாளர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி துணைவேந்தர் அலுவலகம் முன்பாக நேற்று கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகத்தேர்வை நடத்துவதற்கு கடந்த ஜூலை 19 ஆம் திகதிக்கு முன்னர் சுயவிவரக் கோவையை அனுப்புமாறு கூறிய நிர்வாகம் கூறியிருந்தது.

 ஆனால் அதே மாதம் 10ஆம் திகதிக்கு முன்னரே இங்குள்ள அமைச்சர் ஒருவரின் பரிந்துரையுடன் வேறு சிலர் இந்தப் பதவிகளுக்கு நேர்முகம் செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

நேற்று முற்பகல் தொடக்கம் பதாகைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். "பல்கலை நிர்வாகமே எமது நிலைமைக்கு உரிய தீர்வினை வழங்கு'', "எமது வேலையைத் தொடர்ந்து முன்னெடுக்க தகுந்த நடவடிக்கை எடுங்கள்'', "திடீர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டதனால் நிர்க்கதியாகியுள்ள எமக்கு உரிய தீர்வை வழங்குங்கள்'', "புதிய ஊழியர் ஆள்சேர்ப்பின் போது எமது பெயர்ப்பட்டியலை சம்பந்தப்பட்ட அமைச்சிடம் வழங்காமல் நிர்வாகம் எம்மை புறக்கணித் தமை நியாயமா?'', "இதுவரை காலமும் இங்கு விசுவாசமாக உழைத்த எம்மை இடைநிறுத்தி வீட்டுக்கு அனுப்பியது தான் நிர்வாகம் எமக்கு வழங்கிய வெகுமதியா?'', எனப் பல சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியிருந்தனர். 

 உயர் கல்வி அமைச்சினால் பரிந்துரை செய்யப்பட்டதாகக் கூறி கடந்த ஜுலை 19 ஆம் திகதிக்கு முன்னர் சுய விபரங்களை அனுப்பி வைக்குமாறு பதிவாளரால் எமக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னரே அமைச்சர் ஒருவரால் பரிந்துரை செய்யப் பட்ட பலருக்கு தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டு, ஜூலை 10 ஆம் திகதியே விதிமுறைகளை மீறி பக்கச் சார்பாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 

 ஆனால் பல மாதங்களாக பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் எமக்கு உரிய முறையில் நிரந்தர நியமனம் செய்ய மறுக்கிறார்கள் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். 2009 ஆம் ஆண்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் சிலரும் நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சம்பந்தமே இல்லாத 79 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் பணிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரினர். இது தொடர்பில் பல்கலைக்கழக பதிவாளருடன் தொடர்பு கொண்ட போதும் அவரது கருத்தை அறிய முடியவில்லை.
ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்க போராட்டம்; யாழ். பல்கலையில் Reviewed by Admin on October 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.