இலங்கையில் பகுதியளவில் இணைய சுதந்திரம் காணப்படுகின்றது."ப்ரீடம் ஹவுஸ்".
இலங்கையில் பகுதியளவில் இணைய சுதந்திரம் காணப்படுவதாக அமெரிக்காவை மையமாகக்
கொண்டு இயங்கி வரும் " ப்ரீடம் ஹவுஸ் " அமைப்பு அறிவித்துள்ளது .
இலங்கை , இந்தியா , பங்களாதேஷ் போன்ற நாடுகளில் பகுதியளவில் இணைய சுதந்திரம் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளது .
பாகிஸ்தான் , சவூதி அரேபியா , ஈரான் , மியன்மார் உள்ளிட்ட 14 நாடுகளில் முற்று முழுதாகவே இணைய சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதகாக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .
ஐஸ்லாந்தில் பூரண இணைய சுதந்திரம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது . மேலும் அமெரிக்கா , ஜெர்மனி உள்ளிட்ட 17 நாடுகளில் பூரண இணைய சுதந்திரம் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .
இலங்கையில் பகுதியளவில் இணைய சுதந்திரம் காணப்படுகின்றது."ப்ரீடம் ஹவுஸ்".
Reviewed by Admin
on
October 09, 2013
Rating:

No comments:
Post a Comment