மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் காணாமல் போனோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.- படங்கள்
காணாமல் போனோரின் விபரங்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கும் முகமாக மன்னார் பிஜைகள் குழு வட மாகாண முழுவதிலும் விபரங்களை சேகரித்து வருகிறது.
இம்மாதம் 14ம் திகதி அரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டம் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன் படி கடந்த 14ம் திகதி யாழ்ப்பாணத்திலும், 15ம் திகதி கிளிநொ ச்சியிலும்,16ம் திகதி முல்லைத்தீவிலும்,17ம் திகதி வவுனியாவிலும் குறித்த காணாமல் போனவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இன்று வெள்ளிக்கிழமை 18ம் திகதி காலை மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் குறித்த காணாமல் போனோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.
மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவர் திரு.சகாயம் தலைமையில் நடைபெற்ற குறித்த காணாமல் போனோரின் விபரங்களை பதிவு செய்யும் நிகழ்வில் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரி திரு.சுனேஸ் கலந்து கொண்டு விபரங்களை பதிவு செய்தார்.
பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது பதிவுகளை இன்று பதிவு செய்தனர்.
இது வரையில் மன்னார் மாவட்டத்தில் 240 பதிவுகள் பதிவு செய்யப்பட்டள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை நாளை 19ம் திகதி செட்டிகுளம் பகுதியிலும் அதேபோன்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியிலும் காணாமல் போனோரின் விபரங்கள் பதிவு செய்யப்படவுள்ளது.
எனவே தமது உறவுகளை தொலைத்தவர்கள் நாளை யாழ்ப்பாணத்திலும் அதேபோன்று செட்டிக்குளத்திலும் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி 2600 பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
லுயிஸ் மாசல்
மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் காணாமல் போனோரின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.- படங்கள்
Reviewed by Admin
on
October 18, 2013
Rating:
No comments:
Post a Comment