அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் சட்டத்திற்கு புறம்பான வகையில் இடமாற்றம்: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாணசபைக்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் தமது தனிப்பட்ட நலனுக்காக வடமாகாணத்தில் உள்ள அதிபர், ஆசிரியர்களை சட்டத்திற்கு புறம்பான வகையில் இடமாற்றும் நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


இவ்விடமாற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, முறையான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஷப் ஸ்ராலினே மேற்படி விடையத்தினை சுட்டிக்காட்டி தனது கடும் கண்டனத்தினையும் வெளியிட்டுள்ளார்.

மீக நீண்ட காலத்திற்கு பின்னர் வடக்கு மாகாணசபைத் தேர்ல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இத்தேர்தலில் புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்நிர்வாகம் இன்றுவரைக்கும் பதிவிப்பிரமானம் செய்து கொள்ளவில்லை.

இந்நிலையில் புதிய நிர்வாகம் பதவிக்கு வரவிருக்கும் இக்காலப்பகுதிக்குள் அதிகமான அதிபர்கள், ஆசிரியவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்குள் 15 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இவ்வாறான இடமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது.

இவை அனைத்தும் இடமாற்ற சபையின் அனுமதி இல்லாமல், கல்வி உயர் அதிகரிகள் தன்னிச்சையாக செய்து வருகின்றனர். இவ்விடையம் தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகளும் மௌனமாகவே உள்ளனர்.

வடமாகாணத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற இந்நிலையில் திடீரென இடமாற்றங்கள் வழங்கப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

இவ்விடமாற்றங்களை தடுத்து நிறுத்துமாறும், இதுவரைக்கும் இடமாற்றங்கள் செய்யப்பட்டது சம்மந்தமாகவும் முறைப்பாடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வடமாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளரிடமும் இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்படி விடையங்கள் தொடரப்பில் அவர் கூடிய கவனம் எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்று ஜோஷப் ஸ்ராலின் மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சட்டத்திற்கு புறம்பான வகையில் இடமாற்றம்: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு Reviewed by Admin on October 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.