பேருந்துக் கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிப்பு
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் பயண கட்டணங்களை 7 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் பேருந்துகளின் கட்டணங்களும் 7 சதவீதத்தால் அதிகரிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபை மற்றும், தனியார் பஸ் கட்டண திருத்தம் என்பன அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தேசியக் கொள்கைக்கு அமைய தனியார் மற்றும் அரச போக்குவரத்து கட்டணங்களை ஒரே வீதத்தால் அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்துக் கட்டணங்கள் 7 வீதத்தால் அதிகரிப்பு
Reviewed by Admin
on
October 20, 2013
Rating:

No comments:
Post a Comment