யுத்த கால சேதங்கள் குறித்து நாடளாவிய ரீதியில் கணிப்பீடு
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய யுத்த கால சேதங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து நாடளாவிய ரீதியில் கணிப்பீடு ஒன்று மேற்கொள்ள உள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது பற்றி புள்ளிவிபரவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் குணவர்தன குறிப்பிடுகையில், அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள இந்தக் கணிப்பீடு ஒரு மாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
இந்த கணிப்பீட்டில் 1982 ஆம் ஆண்டு முதல் 2012 வரையான காலப் பகுதிக்குட்பட்ட தகவல்களே திரட்டப்பட உள்ளன.
மேலும் யுத்த காலத்தில் இறந்தோர், காயமடைந்தோர், காணாமல் போனோர் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இந்த கணிப்பீட்டின்போது முழுமையான விபரங்கள் சேகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
யுத்த கால சேதங்கள் குறித்து நாடளாவிய ரீதியில் கணிப்பீடு
Reviewed by Admin
on
October 05, 2013
Rating:

No comments:
Post a Comment