தத்தளித்த படகிலிருந்து இலங்கையர்கள் மீட்பு
பத்து பெண்கள், 10 சிறுவர்கள் உள்ளிட்ட 67 இலங்கையர்களை இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பரப்பில் தத்தளித்த படகிலிருந்து பாதுகாப்பாக மீட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
தென் கடற்பரப்பில் தென்மேற்கு திசையில் 200 கிலோ மீற்றர் தொலைவில் மாலைதீவை அண்மித்த பகுதியில் தத்தளித்த ‘தினுஜ புத்தா’ என்ற படகிலிருந்தவர்களையே கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
கடற்படைக்கு நேற்று முன்தினம் கிடைத்த தகவல் மூலம் குறித்த படகிலிருந்தவர்களை மீட்கும் பொருட்டு கடற்படையின் ‘சாகரா’ என்ற மீட்புக்கப்பல் ஸ்தலத்துக்கு அனுப்பப்பட்டது.
நேற்று அதிகாலை குறித்த படகை அண்மித்த கடற்படையின் மீட்புக்கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக தத்தளித்த படகிலிருந்த 67 பேரையும் பாதுகாப்பாக மீட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இதனையடுத்து கோளாறான படகினையும் கரையை நோக்கி கொண்டு வந்த கடற்படையினர் மீட்கப்பட்டவர்களையும் காலி கடற்படை முகாமுக்கு நேற்று மாலை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்த படகில் பயணித்தவர்கள் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த சட்ட விரோத குடியேற்ற வாசிகளாக இருக்கலாம் என சந்தேகிக்கும் கடற்படை அவர்களை விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படை த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தத்தளித்த படகிலிருந்து இலங்கையர்கள் மீட்பு
Reviewed by Admin
on
October 05, 2013
Rating:

No comments:
Post a Comment