அண்மைய செய்திகள்

recent
-

குரு - ஆசிரியர் தினக்கவிதை


ஏணியாய் நின்று உன்னை
ஏற்றிவிட்ட குருமாரை மறவாதே
தேனீ தேன்சேர்ப்பது போலல்வா
தரமாக தாம்சேர்ந்த கல்வியை உமக்களித்தனர்
ஞானியாக நீ கல்விக்கடலைத் தாண்ட 
தோணியாய் நின்றோர் குருவென்றால் மிகையில்லை
கூனிக்குறுகி நடந்துகொள்
கருணையுள்ள உன் குருவைக்கண்டால்
தீனி பலவருடம் குருவுக்கு கொடுத்தாலும்
தேனாய் அவர்தந்த கல்விக்கு ஈடேது
கோணிமட்டும் நடந்திடாதே
குருசாபம் பொல்லாதது பொல்லாதது
குவளயத்தில் பணிசெய்வோரில்
கறைபடியாக் கரமுடையவர் குருவே 
காசுக்கட்டுகளை அவர் எண்ணுவதில்லை
கையிலிருப்பதோ வெண்கட்டித்துகள்
தன்னை அழித்து தரணிக்கு ஒளிதரும்
மெழுகுவர்த்தியாய் மெல்லக் கல்வி தருவாரிவர் 
வருடம் முழுதும் அவர் உழைத்திடினும் 
சில நூறு ரூபாய்கள்தான் சம்பளவேற்றம்
இருபதாம் திகதிகளை இவர்நேசிப்பதில்லை
இருக்கும் கடனை இறுப்பதெப்படியென்ற கவலை
சம்பளவேற்றத்தைப் பெற இவர்படும்பாடு
சகிக்கவே முடியாது


.கே.சி.எம்.அஸ்ஹர்
குரு - ஆசிரியர் தினக்கவிதை Reviewed by Admin on October 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.