முள்ளியவளையில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு மண்டபம் திறப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அக்டட் நிறுவனத்தின் செம் திட்டத்தின் கீழ் சுமார் 85 இலட்சம் ரூபா செலவில் முல்லைத்தீவு முள்ளியவளை கிழக்கில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு மண்டபத்தின் திறப்பு விழா 03 ஆம் திகதி காலை இடம்பெற்றது. 
 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் குறித்த கட்டடத்தை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்து வைத்ததுடன்இ கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொருளாளர் எஸ்.சந்திரகாந்தனிடம் கட்டத்திற்கான திறப்பையும் வழங்கினார். 
 இந்த நிகழ்வில் கறைத்துறைப்பற்று உதவி பிரதேச செயலாளர் ஆர்.குருபரன்இ அக்டட் நிறுவனத்தின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் கரத் பீட்டர் வோக்கர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் விஜயகுமார், கண்காணிப்பு முகாமையாளர் அகலவத்த, அக்டட் நிறுவனத்தின் மாவட்ட நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எஸ்.நித்தி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முள்ளியவளையில் நிர்மாணிக்கப்பட்ட பல்நோக்கு மண்டபம் திறப்பு
.JPG) Reviewed by Admin
        on 
        
October 04, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
October 04, 2013
 
        Rating: 
       
 
 

 
 
 
 
 
.jpg) 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment