அண்மைய செய்திகள்

recent
-

யாழ்.மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொள்ளை! பல லட்சம் ரூபா பணம், நகைகள் அபகரிப்பு!- அச்சத்தில் மக்கள்

.யாழ்.மாவட்டத்தில் மூன்று பிரதேசங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய கொள்ளைச்ச சம்பவங்களை அடுத்து மக்கள் அச்சத்துடனேயே இரவுப் பொழுதைக் கழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடமராட்சி, மருதங்கேணி தெற்கு பிரதேசத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீடு மற்றும் வியாபார நிலையங்களுக்குச் சென்ற கொள்ளையர்கள் கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள இருதயநாதன் என்பவருடைய வீட்டுக்குச் சென்று ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதுடன், சிவபாதசுந்தரம் என்பவருடைய வீட்டுக்குச் சென்று 75ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களையும், சிவகுமார் அருந்ததி என்பவருடைய வீட்டுக்குச் சென்று 10 ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டியையும் கொள்ளயைடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை யாழ்.மருதனார்மடம் பகுதியில் வியாபார நிலையத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும், மீள்நிரப்பு அட்டைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

குறித்த வியாபார நிலையம் நேற்று முன்தினம் இரவு வழமைபோன்று 8.30 மணிக்கு பூட்டிவிட்டு நேற்று காலை திறக்க முற்பட்டபோது வியாபார நிலையத்தின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பால் மா பைக்கற்றுக்கள், பிஸ்கட் பைக்கற்றுக்கள், மீள்நிரப்பு அட்டைகள், ரொக்கப்பணம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தில் உடைக்கப்பட்ட இடங்களில் கைரேகைகள் தென்படாத வகையில் தண்ணீரால் ஊற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாலை வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையத்தில் ஒன்று உடைக்கப்பட்டு அங்கிருந்து பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையம் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ்.மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொள்ளை! பல லட்சம் ரூபா பணம், நகைகள் அபகரிப்பு!- அச்சத்தில் மக்கள் Reviewed by Admin on October 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.