அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பலி

யாழ். அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளினை டிப்பர் வாகனம் மோதியதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளார்.


 சாவகச்சேரி கொடராவில் பிரதேசத்தினைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இறுதியாண்டு மாணவனான யோகேஸ்வரன் கஜந்தன் (வயது 25) என்பவரே உயிரிழந்தவராவார். 

 இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலியில் தனியார் வகுப்பில் கற்பித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவரை, பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 மாணவனின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பலி Reviewed by Admin on October 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.