சத்தியப்பிரமாண முடிவுக்கு அங்கத்துவக்கட்சிகள் எதிர்ப்பு
வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியை இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதன் பின்னர் கொழும்பு காரியாலயத்தில் நேற்று மதியம் வடமாகாண சபை அமைச்சர்கள் தெரிவு குழுக் கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்திலேயே வடமாகாண முதலமைச்சரின் சத்தியப்பிரமாணம் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதியின் முன்னிலையில் நடக்குமென சம்பந்தன் தெரிவித்தார்.
அதற்கு, அங்கத்துவக் கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
ஆயினும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். அதனால் இறுதி முடிவெதுவும் எட்டப்படாத நிலையில் கூட்டம் முடிவுற்றது.
இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமசந்திரனிடம் கேட்போது, இது தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் தான் கூற விரும்பவில்லை என்றார்.
அதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது வடமாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள கனகலிங்கம் சிவாஜிலிங்கம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பானது, நடைபெறவுள்ள முதலமைச்சர் பதவிப்பிரமான நிகழ்வை புறக்கணிக்க உள்ளது. இதுதொடர்பில் ரெலோ செயற்குழு கூடி தீர்மானிக்கவுள்ளது. இதேபோன்றதொரு நிலைப்பாட்டினையே ஏனைய கட்சிகளும் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
சத்தியப்பிரமாண முடிவுக்கு அங்கத்துவக்கட்சிகள் எதிர்ப்பு
Reviewed by Admin
on
October 05, 2013
Rating:
Reviewed by Admin
on
October 05, 2013
Rating:


No comments:
Post a Comment