மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 60 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் டெங்கு காய்ச்சலினால் 60 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக மன்னார் மாவட்;ட பிராந்திய சுகாதார சேவைகள்பணிப்பாளர் என்.பரீட் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதன் ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியிலேயே டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு குறித்த 60 பேரும் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதே வேளை கடந்த வருடம் 2012 ஆம் ஆண்;டு டெங்கு காய்ச்சலினால் 175 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துக்காணப்படுகின்ற இடங்களில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததன் காரணத்தினால் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரிக்கின்றமையினால் அதன் தாக்கத்தினால் குறித்த சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவித்தார்.
எனவே தற்போது தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மன்னார் மாவட்டத்தில் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் மக்கள் ஒருமித்து நுளம்பை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 60 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு
Reviewed by Admin
on
October 09, 2013
Rating:
No comments:
Post a Comment