நிதி ஒதுக்கீ்ட்டுச் சட்டவரைபு இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீ்ட்டுச் சட்டவரைபு இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் நவம்பர் மாதம் 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பிப்பார்.
வரவு செலவுத்திட்டத்தற்கான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 22ம் திகதி முதல் 29ம் திகதி வரை இடம்பெறும்.
இந்நிலையில், வரவு செலவுத்திட்டம் தொடர்பில் டிசம்பர் 20ம் திகதி வரை குழுநிலை வாதம் தொடரும். பின்னர் இறுதி வாக்கு அளிக்கப்படும்.
நிதி ஒதுக்கீ்ட்டுச் சட்டவரைபு இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்
Reviewed by Admin
on
October 22, 2013
Rating:

No comments:
Post a Comment