பாதிக்கப்பட்ட மன்னார் வாக்காளர்கள் கவனத்திற்கு
யாழ்.மாவட்டம் ஜேஃ 74 கிராம அலுவலர் பிரிவில், 2012ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதற்கு கிராம அலுவலரிடம் விண்ணப்பித்து 'பிசி' படிவ அடிக்கட்டையைப் பெற்றிருந்த போதிலும் பதிவு செய்யாத கிராமஅலுவலருக்கு எதிராக கடந்த மாகாணசபைத் தேர்தலில் தம்மை வாக்களிக்க விடாது தடுத்ததாகக் குற்றம் சாட்டி இல: 770, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியைச் சேர்ந்த திரு.சிவரூபன் தம்பதிகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மன்னார் மாவட்டத்திலும் சில பிரதேசங்களில் குறிப்பாக உப்புக்குளப்பிரதேசத்தில் இவ்வாறு நடைபெற்றதாக தேர்தல் காலத்தில் பரவலாகப் பேசப்பட்டது.
இது உண்மையெனின், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும். தேர்தலில் வாக்குக் கேட்டு உங்களிடம் வந்தவர்கள் இனி அடுத்த தேர்தலின் போது தான் மீண்டும் வருவார்கள்.
உங்கள் உரிமையை நீங்கள் தான் வென்றெடுக்க வேண்டும். உரிய ஆதாரங்கள் இருப்பின் உடனடியாக முறைப்பாடு செய்யுங்கள்.
திருவாதவூரன்
பாதிக்கப்பட்ட மன்னார் வாக்காளர்கள் கவனத்திற்கு
Reviewed by Admin
on
October 17, 2013
Rating:

No comments:
Post a Comment