மன்னார் தேவன் பிட்டி கிராம மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது.(படங்கள் )
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட 'சோஆ' நிறுவனத்தினால் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தில் அமைக்கப்ட்ட பாலம் இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய சுமார் 2.7 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் அக்கிராம மக்களின் பங்களிப்புடன் குறித்த பாலத்தினை மன்னார் மாவட்ட 'சோஆ' நிறுவனத்தினால் நிர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த பாலம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டேவிற் டாலி,ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டு பிரிவுக்கான தலைவர் வில்லி வடன் பேக்,நிகழ்ச்சித்திட்ட,அபிவிருத்தி பிரிவு முகாமையாளர் லெஸ்லி ஜேசுராஜன், சோஆ நிறுவனத்தின் இலங்கைக்கான நன்கொடைப்பிரிவின் தலைவி றேபேக்கா ஓவன், மன்னார் மாவட்ட 'சோஆ' நிறுவனத்தின் முகாமையாளர் ஜோச் அந்தோனிப்பிள்ளை,மன்னார் மாவட்ட கடற் தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா,மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக அலுவலகர் முஹமட் ஹஜிக்,கரையோரப் பாதுகாப்பு திணைக்கள திட்டமிடல் அலுவலகர் முஹமட் ஹலிம்,தேவன் பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை நேரு ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பாலத்தினை திறந்து வைத்தனர்.
-இதனைத்தொடர்ந்த குறித்த கிராம மக்களுக்கும்,வருகை தந்த அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் டேவிற் டாலி அவர்களுக்கு குறித்த தேவன் பிட்டி கிராம மக்கள் சார்பாக நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
(மன்னார் நிருபர்)
(31-10-2013)
மன்னார் தேவன் பிட்டி கிராம மக்களின் நீண்ட நாள் கனவு நனவானது.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
October 31, 2013
Rating:
No comments:
Post a Comment