அண்மைய செய்திகள்

recent
-

பூனகரியில் ஆரம்ப பாடசாலை திறந்து வைப்பு.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்ட 'சோஆ' நிறுவனத்தினால் பூநகரி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் கிராமத்தில் அமைக்கப்ட்ட ஆரம்ப பாடசாலை இன்று வியாழக்கிழமை மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய 4 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் குறித்த ஆரம்ப பாடசாலையினை   'சோஆ' நிறுவனத்தினர் நிர்மானித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மதியம்  1 மணியளவில் குறித்த ஆரம்ப பாடசாலை  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்காண தூதுவர் டேவிற் டாலி,ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டு பிரிவுக்காண தலைவர் வில்லி வடன் பேக்,நிகழ்ச்சித்திட்ட,அபிவிருத்தி பிரிவு முகாமையாளர் லெஸ்லி ஜேசுராஜன், சோஆ நிறுவனத்தின் இலங்கைக்காண நன்கொடைப்பிரிவின் தலைவி றேபேக்கா ஓவன், மன்னார் மாவட்ட 'சோஆ' நிறுவனத்தின்  முகாமையாளர் ஜோச் அந்தோனிப்பிள்ளை,பூனகரி வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.தர்ம ரத்தினம், கிளிநொச்சி வலயக்கல்விப்பணிமனையின் தொழில் நுற்ப அலுவலகர் வெற்றி வேல் வெற்குமாரர், பாடசாலை அதிபர் திருமதி பரதன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த ஆரம்ப பாடசாலையினை திறந்து வைத்தனர்















பூனகரியில் ஆரம்ப பாடசாலை திறந்து வைப்பு. Reviewed by NEWMANNAR on October 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.