வைர விழாவைக்கொண்டாடும் மன்னார் தூய செபஸ்ரியார் பேராலயம் . (படங்கள்)
தூய செபஸ்ரியார் பேராலயத்தின் 60ம் ஆண்டு வைர விழா திருநாள் திருப்பலி நிகழ்வுகள் இன்று காலை மன்னாரில் நடை பெற்றது.
இன்று காலை 6:15 மணியளவில் ஆரம்பிக்கப்ட்ட திருவிழா திருப்பலி நிகழ்வுகள் மன்னார் பொது வைத்தியசாலை பகுதியில் அமைந்துள்ள மெழுகுதிரி சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு ஊர்வலமாக சென்று தூய செபஸ்ரியார் பேராலயத்தைச் சென்றடைந்தது.
மன்னார் பேராயர் வண.இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் குறித்த நிகழ்வு நடை பெற்றது.
குறித்த நிகழ்வில் 2000 மேற்பட்ட செபஸ்ரியார் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புனித செபஸ்ரியார் பேராலயத்தை சென்றடைந்த பின் திருவிழா திருப்பலிகள் வண. ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.இத் திரு விழா திருப்பலியை செபஸ்ரியார் பேராலயத்தின் பங்குதந்தை வண.பெப்பி சோசை அடிகளார் ,மன்னார் குருமுதல்வர் வண. விக்ரர் சோசை அடிகளார், வண.சத்தியராஜ் அடிகளார், வண.தமிழ் நேசன் அடிகளார், வண. இராயப்பு அடிகளார், வண.யேசுராஜ் சில்வா அடிகளார் ,வண.அன்ரன் அடிகளார்.ஆகியோர் கூட்டு திருப்பலியாக ஒப்பு கொடுத்தனர்.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தூய செபஸ்ரியாரின் அருளினை பெற கூடி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ஆயர் வண. இராயப்பு ஜோசப் இறை சொற் பொழிவுகளை நிகழ்த்தினார். 2000ற்கும் மேற்பட்ட இறை பக்தர்கள் இறை சொற் பொழிவுகளை பக்தியுடன் கேட்டு தூய செபஸ்ரியாரின் அருளினை பெற்றனர்.
இறுதியாக தூய செபஸ்ரியாரின் திருச்சுருப ஆசிர்வாதம் வண. ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களினால் வழங்கப்பட்டது.
லுயிஸ் மாசல்
வைர விழாவைக்கொண்டாடும் மன்னார் தூய செபஸ்ரியார் பேராலயம் . (படங்கள்)
Reviewed by Author
on
October 27, 2013
Rating:
No comments:
Post a Comment