மன்னார் இளைஞரை காணவில்லை.
மன்னார் றஸூல் புதுவெளியைச்சேர்ந்தவரும் தற்போது புத்தளம் நாகவில்லு றஸூல் நகரில் வசித்து வந்தவருமான எஸ்எம்..சப்வான் (29வயது) (தே.அ.அ.840772527) என்ற இளைஞர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளார்.
திருமணமாகி ஒன்றறை வருடங்களேயான இவர் , சம்பவ தினம் தனது சகோதரரின் கடை அமைந்துள்ள நொச்சியாகமவிற்கு சென்று திரும்பும் வழியிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக கருதப்படுகிறது.
இறுதியாக அன்றைய தினம் காலை 9 மணியளவில் நொச்சியாகமவில் இருந்து பஸ்ஸில் வைத்து தனது வீட்டாருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு,தான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பின் அவரது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இவர் கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் விபரீதங்கள் நடைபெற்றுள்ளனவா என்பது தெரியாமல் வீட்டார் மிகுந்த துயரத்தில் உள்ளனர்.
இவர் காணாமல் போன விடயம் தொடர்பாக புத்தளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இவர் பற்றிய தகவல் அறிந்திருப்பின் 0714983689(அஜ்மல்) , 0713429500(சபீல்) என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
( டீ.எம்.நப்ஹான், ஏ.சீ.எம்.மிஸ்காத்)
மன்னார் இளைஞரை காணவில்லை.
Reviewed by Admin
on
October 27, 2013
Rating:
No comments:
Post a Comment