மன்னார் பொன்தீவுகண்டல் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா ஆராய்வு (படங்கள்)
இன்று நானாட்டான் பிரதேச செயலகத்தில் பொன்தீவுகண்டல் காணிகள் அரசியல் ரீதீயான அனுகு முறையின் கீழ் வேற்று மதத்தவருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மக்களின் பிரச்சினைகளை கண்டறியும் முகமாக வட மாகாண சபை உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா குறித்த பிரச்சினைக்குரிய பகுதியிற்கு சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.
இதன் போது நானாட்டான் பிரதேசசெயலாளர் எஸ். சந்திரையா அருட்தந்தை சுரேந்திரன் றெவல்; மற்றும் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் சகாப்தீன் ஆகியோர் கூடவிருந்தனர்.
குறித்த பகுதியிற்கு சென்ற மாகாண சபை உறுப்பினர் சம்பந்தப்பட்ட இரு பகுதியினரையும் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
குறிப்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
லுயிஸ் மாசல்
மன்னார் பொன்தீவுகண்டல் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் பிறிமூஸ் சிராய்வா ஆராய்வு (படங்கள்)
Reviewed by Author
on
October 28, 2013
Rating:
No comments:
Post a Comment