அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு வலயத்தின் சில கிராமங்களுக்கு அமைச்சர் விஜயம்....


31-10-2013 (வியாழன்) மன்னார் மடு வலையத்தினுள் அமைந்துள்ள இரணை இலுப்பைகுளம் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்த வட மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி கௌரவ அமைச்சரும் சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன் அவர்களுக்கான வரவேற்ப்பு கௌரவிப்பு நிகழ்வானது வியாழன் அன்று அப்பிரதேசத்தில் வெகு கோலாகலாமாக இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மர நடுகையும் தொடர்ந்து இரணை இலுப்பைக்குளம் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் விசேட பூஜையும் இடம்பெற்றது.

தொடர்ந்து இரணை இலுப்பைக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடாசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள அதிபருடன் பாடசாலையின் குறை நிறைகள் பற்றி கலந்துரையாடினார். அதன் நிறைவில் கிராம அபிவிருத்தி மண்டபத்தில் அந்த கிராம மக்களை சந்தித்து உரையாற்றினார்.

கௌரவ அமைச்சர் தனது உரையில் இங்கு வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் பின்னணியில் தான் கிராமத்தின் அபிவிருத்தி தங்கியுள்ளது என்றும் இனிவரும் காலங்களில் நாம் அனைவரும் தமிழ் பேசும் மக்கள் என்ற ஒன்றையே வெளிக்கொணர வேண்டும் அப்படியாக இருந்தால் தான் தனது அமைச்சின் கீழ் பாகுபாடின்றி தனது மக்களுக்கு தன்னால் சேவையாற்ற முடியும் என்றும்.. மாதங்கள் ஒருபோதும் தீமைகளை மக்களுக்கு போதிப்பதில்லை எனவே மதன்களிநூடாகவே மக்களை நல்வழிப்படுத்த முடியும், நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் ஆணித்தரமாக தான் தெரிவிப்பதாக கூறினார்..

தொடர்ந்து தனது பணிகள் இலகுவான முறையில் மக்களை சென்றடைய தான் ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாகவும் அதற்கமைவாக ஒரு விசேட குழுவை நியமித்து கிராமங்களுக்கான தேவை மதிப்பீடு (Needs Assessment) ஒன்றினை செய்து கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் நான்கு நபர்களை கொண்ட செயற்ப்பாட்டு குழு (Action Team ) ஒன்றை உருவாக்கி அதில் வயது முதிர்ந்த ஆண் பெண், இளஞர்களில் ஆண் பெண் இருவராக இந்த நான்கு நபர்களையும் ஒவ்வொரு கிராம அங்கத்தவர்களும் இணைந்து ஒரு பொதுக்கூட்டதின் மூலம் மக்களுக்கு சேவை செய்ய கூடியவர்களாக தெரிவுசெய்து தர வேண்டும் என்றும் இவர்களுக்கூடாக ஒவ்வொரு கிராம மட்ட பிரச்சினைகளையும் தான் அறிந்து தனது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவுள்ளதாகவும் கல்வி என்பது மிகவும் அவசியாமான விடயம் என்பதை ஒவ்வொரு மாணவனும் பெற்றோர்களும்  உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வறுமையை காரணம் காட்டி எவரும் கல்வியை இழக்கக்கூடாது என்றும் இந்தக்கிராமத்தின் பாடசாலையை தரமுயர்துவதர்க்கான நடவடிக்கைகளை வட மாகாண கல்வி அமைச்சருடன் கதைப்பேன் என்றும்... வைத்தியர் இல்லாத குறையை சுகாதார அமைச்சருடன் கதைத்து எனது மக்களுக்கு பெற்றுத்தருவேன் எனவும் அத்தோடு தேர்தல் காலத்தில் தமிழ் தேசியத்துக்கும் தனக்கும் வாக்களித்த அணைத்து உள்ளங்களுக்கும் தனது சிரம் தாழ்த்திய நன்றிகளை கூறி நிறைவு செய்தார்...

தொடர்ந்து அங்குள்ள இந்துக்கோவில்கள் கிறீஸ்தவ ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கும் விஜயம் செய்து அனைத்து மததலங்களும் திருத்துவதற்கான ஒழுங்குகளை விரைவில் செய்து தருவதாகவும் தெரிவித்தார்...

அயல் கிராமங்களான பூசாரியார் குளம், மண்கிண்டி, விளாத்திகுளம், பரிசங்குளம், அலைகள் போட்டகுளம், சின்னவலையன் கட்டு, காக்கையன் குளம், கல்மடு, மதீனா நகர், முள்ளிக்குளம் ஆகிய இடங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.​
மன்னார் மடு வலயத்தின் சில கிராமங்களுக்கு அமைச்சர் விஜயம்.... Reviewed by Admin on November 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.