யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரு மருந்தகங்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு
யாழ்.குடாநாட்டின் நகரப் பகுதியில் போதை வில்லைகளை விற்பனை செய்த இரு மருந்தகங்களை உடனடியாக சீல் வைத்து மூடுமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பினை வழங்கியிருக்கின்றது.
மேற்படி தீர்ப்பு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நகரப் பகுதியிலுள்ள இரு மருந்தகங்களில் போதை ஏற்படுத்தும் வில்லைகளை உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற குளிர்பானங்களின் பெயர்களில், உறைகள் தயாரிக்கப்பட்டு அவற்றுள் மேற்படி போதை வில்லைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த வில்லைகளை தண்ணீரில் அல்லது குளிர்பானத்தில் கலந்து உட்கொண்டால் மதுபானத்திற்கு நிகரான போதையினை ஏற்படுத்தும்.
இந்நிலையில் மேற்படி விடயம் சுகாதார பரிசோதகர்களால் அறியப்பட்டு குறித்த மருந்தகங்கள் சோதனையிடப்பட்ட போது பல ஆயிரக்கணக்கான வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த வில்லைகள் சீனா நாட்டிலிருந்து கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்படி விடயத்தை சுகாதாரப் பரிசோதகர்கள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குறித்த இரு வர்த்தக நிலையங்களையும் உடனடியாக சீல் வைத்து மூடுமாறு நீதிபதி பெ.சிவகுமார் உத்தரவிட்டார்.
அத்துடன், உரிமையாளர்கள் இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான காசு பிணையில் செல்லவும் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படிச் சம்பவம் யாழ்.குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இரு மருந்தகங்களை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
November 29, 2013
Rating:

No comments:
Post a Comment