வடக்கில் வாக்காளர்களாக பதியாமல் இருக்கும் வாக்காளர்கள் தொடர்பில் கலந்துரையாடல்
வடக்கில் வாக்காளர்களாக இன்னும் பதியாமல் இருக்கும் வாக்காளர்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சரமான றிசாத் பதியுதீன் தலைமையிலான பிரதி நிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் செயலகத்தில் வைத்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவை அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர்,மற்றும் சவாஹிர் அன்சாரி,முஹம்மத் மபூஸ் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
வடக்கில் இடம் பெயர்ந்தும்,மீள்குடியேறியுமுள்ள மக்கள் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் எதிர் கொள்ளும் சிரமங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
18 வயதை அடைந்தும் வாக்காளர்பட்டியலில் பெயர்கள் உள்வாங்கப்படுவதில் உள்ள தடைகள் பற்றி தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்திற்கு கட்சியின் தேசிய தலைவரும்,அமைச்சருமாதன றிசாத் பதியுதீன் கொண்டுவந்தார்.
இதன் போது கருத்துரைத்த தேர்தல் ஆணையார் மஹிந்த தேசப் பிரிய இவ்வி்டயம் தொடர்பில் மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர்களுடன் கலந்துரையாடுவதாகவும் கூறினார்.
வடக்கில் வாக்காளர்களாக பதியாமல் இருக்கும் வாக்காளர்கள் தொடர்பில் கலந்துரையாடல்
Reviewed by NEWMANNAR
on
November 23, 2013
Rating:

No comments:
Post a Comment