வடக்கில் தமிழர்களையும்,முஸ்லிம்களையும் பிரித்து அவர்களுக்கிடையில் பிரிவை ஏற்படுத்த துடிக்கும் சக்திகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்கப் போவதில்லைஹூனைஸ் பாருக்
வடக்கில் தமிழர்களையும்,முஸ்லிம்களையும் பிரித்து அவர்களுக்கிடையில் நிரந்தரமான பிரிவை ஏற்படுத்த துடிக்கும் சக்திகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்கப் போவதில்லையென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் ஜனநாயம் மீறப்படுவதாகவும்,இம்மக்கள் அச்சத்தில் வாழ்வதாகவும் சர்வதேச நாடுகளுக்கு கூறி அவர்களது பிள்ளைகளை சர்வதேச வெளிநாட்டு பாடசாலைகளில் கற்றல்களை செய்துள்ள அரசியல்வாதிகள் வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார மற்றும் அடிப்படை வசதிகளை எதனை செய்துள்ளார்கள்.
குறிப்பாக வன்னி மாவட்டத்தினை பொருத்தவரையில் நான் தலைமைத்துவம் வகிக்கும் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் செயற்பாடுகளை இந்த இனவாத சக்திகளுக்கு முன்னுதாரணமாக சமர்ப்பிக்க தயாராகவுள்ளதாகவும்,எமது தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனும் அவ்வாறே இருப்பதாகவும் கூறினார்.எமது பதவிகளை கொண்டு அனைத்து மாவட்ட மக்களுக்கும் அதி உயர் பணிகளை ஆற்றிவருவதாகவும்,சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்பாவி தமிழ்-முஸ்லிம்களை துாண்டி மோதல்களை ஏற்படுத்த முனைவதாகவும் கூறினார்.
வன்னி மாவட்டத்தில் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழும் மக்களின் விமோசனத்திற்காக அரும்பணிககளை செய்துவரும் நிலையில் இம்மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை தடுக்கும் வேலைகளை வீறு நடையுடன் இவர்கள் செய்வுது.இந்த மக்களின் எதிர்காலாத்தை கேள்விக்குரியாக்கியுள்ளதாகவும் கூறினார்.
மட்டக்களப்பிலும்,கொழும்பிலும் இருந்து கொண்டு வடக்கு மக்களுக்கு எதிராக செயற்படும் சில அரசியல்வாதிகள்,வடபுல மக்களை சர்வதேசத்துக்கு அடகு வைத்து அடுத்த தேர்தலுக்காக பணம் தேடும் பணியினை ஆரம்பபித்துள்ளனர்.
பொது நலவாய மாநாடு முடிந்த கையோடு இலங்கைக்கு எதிரான தேசத்துரோக செயற்பாடுகளுக்கான அடித்தளம் வேகமாக இடப்படுவதாக சுட்டிககாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,இந்த இனவாதிகளின் சதி வலைகளில் அப்பாவி தமிழ் பேசும் மக்கள் விழுந்துவிட வேண்டாம் என்றும் கோறிக்கைவிடுத்துள்ளார்.
கடந்த 30 வருடம் எமது மக்கள் இழந்தவைகள் ஏராளம்.அவற்றில் முடியுமான சிலதையாவது பெற்றுக் கொள்ள முயற்சிளை செய்கின்ற போது மீண்டும் வடக்கில் இனரீதியான மோதல்களை ஏற்படுத்த பிழையான அனுகுமுறைகளை இவர்கள் கையாள்வதாக கூறினார்.
இந்திய வீடமைப்பு திட்டத்தை இலங்கை நாட்டில் குறிப்பாக வடக்கில் பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட மக்களது வாழ்க்கையினை கட்டியெழுப்பும் நோக்குடன் இந்திய அரசாங்கம் வழங்கிய வீடமைப்பு திட்டத் தெரிவு தொடர்பில் மக்களை பிழையாக அழிநடத்தி,வறுமைப்பட்ட மக்களை வீதக்கு இறக்கி அபிவிருத்தியின் எதிராளிகள் இவர்கள் என்பதை காட்டிக் கொடுப்பு செய்யும் நிலையினை இவ்வாறான அரசியல் சக்திகள் செய்கின்றனர்.வீடமைப்பு திட்ட தெரிவு தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் அவர்களிடம் கேட்டு பெற்றுக் கொள்வதை விடுத்து ஒரு சிறுபான்மை சமூகத்தின் மக்கள் பிரதி நிதியாக வடக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காவும் குரல் கொடுத்து அவர்களுக்காக இரவு பகல் ஓய்வின்றி செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இல்லாத பொல்லாதவற்றை இட்டுக்கட்டி அவரை ஊடகங்களின் விற்பனை பொருளாக மாற்றிவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் வாக்குறுதிகள் தொடர்பில் நம்பகத்தன்மையினை கொள்ள முடியுமா என்ற கேள்வி இப்போது எழ ஆரம்பித்துள்ளது.
வடக்கில் தமிழ் சமூகத்தின் உரிமைகள் அவர்கள் சார்ந்தவர்களினாலும்,அமைப்புக்களில் இருப்பவர்களினாலும் காட்டிக் கொடுப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களில் துணிந்து பேச வேண்டிய இடத்தில் பேசி அம்மக்களின் உரிமைகளுக்கு அழுக்கு ஏற்படவிடாமல் எமது கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையிலான எமது அரசியல் அணியினர் செய்துவந்துள்ளனர்.அதனால் அதான் இன்று எம்முடன் தமிழ் சகோதரர்கள் ஒன்றுபட்டு பயணிததக் கொண்டிருக்கின்றனர்.வெறும் வாய்ப்பேச்சும்,மக்களை குழுப்பும் வாசகங்களையும் வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்பவர்களின் செயற்பாடுகள் வண்மைான கண்டனததுக்குரியதாகும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,யதாரத்தமும்,உண்மையுமே என்றும் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார்
வடக்கில் தமிழர்களையும்,முஸ்லிம்களையும் பிரித்து அவர்களுக்கிடையில் பிரிவை ஏற்படுத்த துடிக்கும் சக்திகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்கப் போவதில்லைஹூனைஸ் பாருக்
Reviewed by NEWMANNAR
on
November 21, 2013
Rating:

No comments:
Post a Comment