நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் வட மாகாண விஜயம்
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று பிரதேச முக்கியஸ்தர்கள், உலமாக்கள், வலயக்கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தனர்.
இவ்வாறான தொடர்ச்சியான சந்திப்புக்களின் மூலம் அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள மக்களின் மீள்குடியேற்றம், கல்வி, வாழ்வாதாரம் உட்பட அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்புக்களில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி), காத்தான்குடி நகரசபையின் எதிர்கட்சித் தலைவரும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி), வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி), நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியின் தலைவர் நஜா முஹம்மத், ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான மத்திய நிலையத்தின் தலைவர் சிராஜ் மஸ்ஹூர், சகோதரர் முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறாசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இர்ஷாத் உட்பட மேற்படி அமைப்புக்களின் உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் வட மாகாண விஜயம்
Reviewed by NEWMANNAR
on
November 21, 2013
Rating:
No comments:
Post a Comment