வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது முதன்மையான பணி. வடமாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்கள் அங்கவீனமடைந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது முதன்மையான பணி. வடமாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட்.
கடந்த 25-10-2013அன்று நடைபெற்ற வடமாகாணசபையின் கன்னிஅமர்வு சுமூகமாகவும் ஆரோக்கியமாகவும் நடைபெற்றுமுடிந்தது எனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர்கள் மற்றும் அங்கவீனமடைந்தவர்கள் ஆகியோர்களுக்கு உதவுவதும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுமே வடமாகாணசபையின் முதற்கட்டமானதும் முதன்மையானதுமான பணியாகும் என்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் திரு இம்மானுவேல் ஆனோல்ட் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் விக்ரோறியாமாநிலத்தில் ஒலிபரப்பாகிவரும் தமிழ்க்குரல் வானொலிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ்மக்கள் தனிப்பட்ட அரசியல்கட்சிகள் என்பதற்கு அப்பால் தமிழுக்கும் தமிழ்த்தேசியத்திற்கும் தங்களது ஏகோபித்த ஆணையாகவே தங்களது வாக்குகளை அளித்திருக்கின்றார்கள். ஆமைச்சுப்பதவிக்ள் தொடர்பில் ஆரம்பத்தில் கட்சிகளுக்கிடையில் உட்கருத்து முரண்பாடுகள் நிலவியபோதும் கூட்டமைப்பின் தலைமை அவசரப்பட்டு சில முடிவுகளை எடுக்காமல் காலம்தாமதித்தாலும் ஆரோக்கியமான முடிவுகளையெடுத்து பொறுப்புவாய்ந்த அமைச்சரவையை நியமித்து தற்போது எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் ஆரோக்கியமான நிர்வாகம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அத்துடன் கட்சிகளுக்கிடையே கருத்துவேற்றுமை இருந்தாலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு எனும்போது அதில் அங்கம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளும் ஒரு குடையின்கீழ் செயற்படுகின்றோம். மேலும் யுத்தகாலத்திலும் பார்க்க யுத்தத்திற்குப்பின்னரான நான்கு ஆண்டுகளில் பெண்கள்மீதான பாலியல் வல்லுறவுகள் சிறுவர் துஸ்பிரயோகங்கள் உள்ளிட்ட அடிப்படை மனிதவுரிமை மீறல்கள் மிகவும் மோசமாக நடைபெறுகின்றன.
வலிகாமம் வடக்குப்பகுதி மக்கள் இருபத்தைந்து ஆண்டுகளாக அகதிவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றநிலையில் ஓரிரு தினங்களுக்கு முன்பாக படையினரால் அவர்களின் வீடுகள் இடித்து அழிக்கப்பட்டன. இலங்கை அரசின் இத்தகைய அராஜக செயற்பாடுகளை கொழும்பில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மகாநாட்டிற்கு முன்னதாகவோ அல்லது பின்பாகவோ சர்வதேச சமூகத்திற்கு சொல்லவேண்டிய வகையில் சொல்லுவோம் என்றும் அவர் அச் செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது முதன்மையான பணி. வடமாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட்
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:
Reviewed by Admin
on
November 02, 2013
Rating:

No comments:
Post a Comment