அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி மாவட்ட மாற்று திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாற்று திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்று வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றன. 

 கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா ஆகியோரின் ஏற்பாட்டில் கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட அதிகாரிகள் குழுவினரால் இந்த மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

 இதன்போது மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை செலுத்த தகுதியான உடல் நிலையைக் கொண்ட 70 இற்கும் மேற்பட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

 இவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திர எழுத்துப் பரீட்சை, வாகன ஓட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட மாற்று திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் Reviewed by NEWMANNAR on November 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.