அண்மைய செய்திகள்

recent
-

பிறந்தவுடனேயே ஆண் குழந்தையை கொன்ற தாய்.[படங்கள் இணைப்பு ]

வவுனியா , பூம்புகார் பிரதேசத்தில் பிறந்தவுடனே ஆண் சிசுவை கொலை செய்து புதைத்த பெண்ணொருவரையும் அப்பெண்ணின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் . இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேளாங்கன்னி ( வயது 25 ) என்ற பெண் இன்று அதிகாலை ஆண் சிசுவொன்றை பிரசவித்துள்ளார் .

 பிரசவித்தவுடனேயே சிசுவை கழுத்து நெரித்து கொலை செய்து , அதனை தன் தாயாரான தங்கவேலு காளியம்மாவிடம் ( வயது 63 ) தெரிவித்துள்ளார் . இதனையடுத்து இருவரும் இணைந்து தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்கருகில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் குழியொன்றை வெட்டி அதில் சிசுவின் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர் . 

 குழந்தையைப் பிரசவித்த வேளாங்கன்னிக்கு அதிகளவில் இரத்த ஓட்டம் ஏற்பட்டதால் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . அங்கு அவரில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர் . இதனையடுத்து பொலிஸார் அவரை விசாரித்ததில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன . 

 இதனையடுத்து , இருவரையும் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளதுடன் , சம்பவ இடத்திற்கு இன்று பகல் சென்று புதைக்கப்பட்ட சிசுவையும் தோண்டி எடுத்துள்ளனர் . கைது செய்யப்பட்ட பெண் பொலிஸாரின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது . இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .



பிறந்தவுடனேயே ஆண் குழந்தையை கொன்ற தாய்.[படங்கள் இணைப்பு ] Reviewed by NEWMANNAR on November 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.