சங்கிலியன் பூங்காவை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது! யாழ். மாநகரசபை மேயர் யோகேஸ்வரி
யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியங்களோடு பின்னிப்பிணைந்த சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணியை இராணுவத் தேவைகளுக்காக வழங்க முடியாது என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா காணியை இலங்கை பாதுகாப்புப் படையின் 27வது அணியின் C குழுவினருக்கு பாரப்படுத்தும்படி பத்தரமுல்லையிலுள்ள காணி ஆணையாளர் திணைக்களத்திலிருந்து நல்லூர் பிரதேச செயலருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
காணி ஆணையாளரின் பணிப்புரைக்கமைய நல்லூர் பிரதேச செயலாளர் குறித்த காணியை பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவது தொடர்பாக அண்மையில் யாழ். மாநகர சபையின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
இந்நிலையில், அக்கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இன்று செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிததத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணி யாழ். மாநகர சபையின் பராமரிப்பிலேயே உள்ளதுடன், அதனை 'சங்கிலியன் பூங்கா' என்ற பெயரில் 80 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு பூர்வாங்கப் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எனவே, மேற்படி காணியை பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்கு வழங்க முடியாது என்பதுடன், சங்கிலியன் பூங்கா சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு மையமாக புனரமைக்கப்பட வேண்டுமென்பதே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு என்றும் அந்த கடிதத்தில் முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சங்கிலியன் பூங்காவை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது! யாழ். மாநகரசபை மேயர் யோகேஸ்வரி
Reviewed by NEWMANNAR
on
November 06, 2013
Rating:

No comments:
Post a Comment