அண்மைய செய்திகள்

recent
-

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி

யுத்த காலத்தில் உயிரிழந்தோர் மற்றும் கொல்லப்பட்டோருக்கு மாவீரர் தினமான இன்று 27 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அஞ்சலியை செலுத்தியது.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை 2014 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஐந்தாம் நாள் விவாதம்
இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உரையாற்றுவதற்கு அதன் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ.யோகேஸ்வரன் அழைக்கப்பட்டபோதே தனது உரைக்கு முன்பதாக மேற்படி அஞ்சலியை செலுத்தினார்.

யுத்தத்தில் போராடி உயிரிழந்த அனைத்து வீரர் பெருந்தகைகளுக்கும் தமது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிப்பதாகவும் யோகேஸ்வரன் எம்.பி. அதன்போது குறிப்பிட்டார்.
மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி Reviewed by NEWMANNAR on November 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.