அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை 8000 முறைப்பாடுகள் பதிவு

காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை 8000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதென காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தலைவர், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

முறைப்பாடுகளின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட முடியாது எனவும் ஒரு காணாமல் போதல் சம்பவம் குறித்து பல முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

´கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைக்கு அமைய 2013 ஒகஸ்ட் 15ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்தார்.

1998 ஜூன் 10 தொடக்கம் 2009 மே 19ம் திகதி வரை காணாமல் போனவர்களது விபரம் திரட்டல், மீண்டும் அவ்வாறு நடக்காதிருக்க பொறுப்புக்கூற பரிந்துரை முன்வைத்தல், காணாமல் போனவர்களது குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய தேவைகள் குறித்து ஆராய்தல் போன்ற பணிகள் எமது ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒக்டோபர் 30ம் திகதிவரை முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு பிரபல பத்திரிகைகள் மூலம் விளம்பரம் செய்திருந்தோம். பின்னர் பலரது வேண்டுகோளுக்கும் இணங்க நவம்பர் 30ம் திகதிவரை முறைப்பாடு செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் உள்நாட்டு ரீதியில் ஆணைக்குழு அறிக்கையை விரைவில் வெளியிடுமாறு கோரினால் அது நடைமுறை சாத்தியமற்றதாகும்.

தமிழ் மொழியில் கிடைக்கும் முறைப்பாடுகளை மொழிப்பெயர்த்தல், அந்தந்த பகுதிகளுக்குச் சென்று உண்மை தகவல்களைப் பெறல், முறைப்பாடுகள் அதிகம் போன்ற காரணங்களால் அறிக்கையை விரைவில் வெளியிட முடியாது.

வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகள் தொடர்பில் மாத்திரமன்றி இராணுவ சேவையில் இருந்து காணாமல் போனவர்கள் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளது. அனைத்து முறைப்பாடுகள் குறித்தும் செயற்பட வேண்டியுள்ளது.

நாங்கள் சுயாதீன ஆணைக்குழு. ஏதேனும் குற்றம் இழைக்கப்பட்டிருக்குமாயின் அது குறித்து சட்ட மா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இம்மாதம் 30ம் திகதியில் இருந்து வடக்கு-கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளோம்´ என காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தலைவர், முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி பராக்கிரம பரணகம தெரிவித்தார்.


காணாமல் போனவர்கள் குறித்து இதுவரை 8000 முறைப்பாடுகள் பதிவு Reviewed by Author on November 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.