அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கான ஆயுத விற்பனை குறித்த காரணத்தை விளக்குமாறு கமரூனிடம் கேள்வி



இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விளக்கமளிக்க வேண்டும் என பிரித்தானிய ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இயந்திரத் துப்பாக்கிகளும் ஏனைய துப்பாக்கிகளையும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய பிரித்தானிய அரசாங்கம் அனுமதியளித்தமைக்கான காரணத்தை தெரியப்படுத்த வேண்டும் என ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் சேர் ஜோன் ஸ்டான்லி கேள்வி எழும்பியுள்ளார். 

பிரித்தானியா எட்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த அனைத்து ஆயுதங்களும் கடற் கொள்ளை நடவடிக்கைகளை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற வாதத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகளும் குற்றம் சுமத்தியுள்ளன. 

ஆயுத விற்பனை தொடர்பில் பிரதமரும் அமைச்சர்களும் விளக்கம் அளிக்க வேண்டுமென சேர் ஜோன் சுட்டிக்காட்டியுள்ளார். 

எவ்வெறெனினும், யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளுக்காக பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு பூரண ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 
இலங்கைக்கான ஆயுத விற்பனை குறித்த காரணத்தை விளக்குமாறு கமரூனிடம் கேள்வி Reviewed by Author on November 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.