மனித உரிமை ஆணைக்குழுவில் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக அனந்தி முறைப்பாடு
கடந்த வார இறுதியில் (15) பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் யாழ். விஜயத்தின்போது கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்களது உறவினர்கள் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி ஈடுபட்டார்.
இதன் பின்னதாக கடந்த வார இறுதி நாட்களில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
இதன் காரணமாக தாம் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்ததாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.
மனித உரிமை ஆணைக்குழுவில் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக அனந்தி முறைப்பாடு
Reviewed by Author
on
November 23, 2013
Rating:

No comments:
Post a Comment