மன்னார் - யாழ் தனியார் பேரூந்துகளில் மாறுபட்ட கட்டண அறவீடு. (பட இணைப்பு)

இருந்த போதிலும் தனியார் பஸ்கள் தொடர்ந்தும் தமது சேவையினை தொடர்ச்சியாக வழங்கி மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர். பாலியாறு பெருக்கெத்த வேளையிலும் மக்களுக்காகவே உண்மையான சேவையை வழங்கிய மன்னார் - யாழ் தனியார் பஸ் சங்கங்களை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.
இவர்களது சேவையின் மூலம் நோயாளர்கள், வயோதிபர்கள், அரச ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களும் நன்மையடைந்தனர்.
ஆனால், தற்போது இவ் வழித்தடங்களில் சேவையிலீடுபடும் தனியார் பஸ் சங்கத்தினர் இரு வேறு கட்டண முறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனால் பயணிகளின் வெறுப்புக்களுக்கும் ஆளாகி வருகின்றனர். சங்குப்பிட்டி வழியான சேவை ஆரம்பிக்கப்பட்டு அண்மைக்காலம் வரை சில கட்டண அதிகரிப்புக்களுடன் மன்னார் - யாழ் ஒருவழிக் கட்டணமாக ரூ.198 அறவிடப்பட்டு வந்தது (ரூ.2 மிகுதிக் காசு நடத்துனரின் சட்டைப் பைக்குள் போனமை வேறு கதை) .
வீதியின் சீரின்மையைக் காரணம் காட்டி மேற்கொள்ளப்பட்ட இக் கட்டண அறவீட்டை மக்களும் ஏற்றுக்கொண்டனர். எனினும் தற்போது இவ் வழித்தடத்தின் 60% ற்கு மேற்பட்ட பாதை காபெற் வீதியாக மாற்றப்பட்ட பின்னரும் சில நடத்துனர்கள் ரூ.198 இனையே அறவிட்டுவருகின்றனர். ஆனால் சில நடத்துனர்களோ ரூ.190 ஜ அறவிட்டுவருகின்றனர்.
அண்மையில் பத்திரிகைகளில் இக் கட்டணக் குறைப்புத் தொடர்பான அறிவித்தல்களும் வெளியாகி இருந்தன.
எனினும் இது தொடர்பாக நடத்துனர்களிடம் கேட்டால் “தமக்கு இன்னமும் அறிவிக்கவில்லை, பாதை முழுமையாக சீரமைக்கப்படவில்லை” போன்ற நொண்டிச் சாட்டுக்களைக் கூறிவருகின்றனர். இவ் வழித்தடத்தில் காணப்படும் அனைத்து இடங்களுக்கும் இப்பிரச்சினை காணப்படுகின்றது.
இம் மாறுபட்ட கட்டண அறவீட்டை மேற்கொள்பவர்களில் ரூ.198 ஜ அறவிடுபவர்கள் மன்னார் சங்கத்தினரைச் சேர்ந்தவர்களெனவும் ரூ.190 ஜ அறவிடுவோர் யாழ், சங்கத்தினர் எனவும் அறியமுடிகின்றது. ஒரே வழித்தடத்தில் ஈடுபடும் பேரூந்துகளில் ஏன் இந்தக் கட்டண மாறுபாடு எனவும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
எனவே இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள், மன்னார் அரச அதிபர், கௌரவ வட மாகாண போக்குவரத்து அமைச்சர், மன்னார் - யாழ் தனியார் போக்குவரத்துச் சங்க நிர்வாகிகள் தலையிட்டு இதற்கொரு தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மன்னார் - யாழ் தனியார் பேரூந்துகளில் மாறுபட்ட கட்டண அறவீடு. (பட இணைப்பு)
Reviewed by மன்னார் மன்னன்
on
November 28, 2013
Rating:

No comments:
Post a Comment