மன்னாரில் மாவீரர் தினம் அனுஸ்டித்த மூவர் கைது: யாழ். பல்கலையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி
பொலிஸ் மற்றும் இராணுவ அறிவுறுத்தலுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் மாவீரர் தினம் அனுஸ்டித்தமையின் காரணமாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண அத தெரணவிற்கு தெரிவித்தார்.
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி மேற்கொள்வது சட்டவிரோத செயல் என பொலிஸார் அறிவித்தல் விடுத்தனர்.
இந்நிலையிலும் வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(27) காலையும் மாலையும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக சூழலில் இராணுவம், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்துடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும் வைத்தியசாலையின் புதிய கட்டடத்திலும் சுடர் ஏற்றப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை அறிந்த இராணுவத்தினர் உடனடியாக அவ்விடத்திற்கு சென்று தீபங்களை அணைத்து அவற்றை அப்புறப்பட்டுத்தியுள்ளனர்.
இதேவேளை மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (26) இரவு மாவீரர் தின சுவரொட்டிகள் பல ஓட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ் சுவரொட்டிகள் உடனடியாக பாதுகாப்பு பிரிவினரால் அகற்றப்பட்டுள்ளன.
மன்னாரில் மாவீரர் தினம் அனுஸ்டித்த மூவர் கைது: யாழ். பல்கலையிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி
Reviewed by Author
on
November 28, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment