அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கொண்ணையன் குடியிருப்பு கிராமத்தில் தீவிபத்து வீடுஉள்ளிட்ட உடமைகள் எரிந்து நாசம் - படங்கள்

மன்னார் கொண்;ணையன் குடியிருப்பு கிராமத்தில் வீடு தீப்பற்றி சாம்பல்.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள  கொண்ணையன் குடியிருப்பு கிராமத்தில் அமைந்;துள்ள வீடு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை(19-11-2013)  மாலை தீப்பற்றியதில் குறித்த வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பளாகியுள்ளது

கொண்ணையன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.பஸ்ரியன் (வயது-27) எனும் குடும்பஸ்தருடைய வீடே இவ்வாறு எரிந்து சாம்பளாகியுள்ளது.

குறித்த வீடு ஓலையினால் அமைக்கப்பட்டுள்ளது.சம்பவ தினமான நேற்று செவ்வாய்க்கிழமை மாலை குறித்த வீட்டின் உரிமையாளரான பஸ்ரியன் என்பவர் தொழிலுக்குச் சென்றிருந்த போது அவருடைய மனைவி குறித்த வீட்டில் உள்ள சமையல்; அறையின் அடுப்பினை பற்ற வைத்து நீர் கொதிக்கவைத்;து விட்டு தனது ஒரு வயது குழந்தையினை அருகில் உள்ள வீட்டில் கொடுத்து விட்டு உடுப்பு துவைப்பதற்காக சென்றுள்ளார்.

இதன் போது அடுப்பு பற்றிய நிலையில் தீ ஓலையில் பற்றி வீடு முழுமையாக எரிந்துள்ளதாக அதன் உரிமையாளர்; தெரிவித்தார்.

இதனால் சுமார்; 2 இலட்;சம் ரூபாய் பெறுமதியான உடமைகள்; எரிந்து சாம்பளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-அருகில் உள்ள எவரும் சம்ப நேரம் இல்லாமையினால்; குறித்த தீயினை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
-மேலதிக விசாரனைகளை தலைமன்னார் ;பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






மன்னார் கொண்ணையன் குடியிருப்பு கிராமத்தில் தீவிபத்து வீடுஉள்ளிட்ட உடமைகள் எரிந்து நாசம் - படங்கள் Reviewed by Author on November 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.