அண்மைய செய்திகள்

recent
-

521 படைப்பிரிவின் கீழிருந்த வீடுகள்,காணிகள் கையளிப்பு

யாழ். பருத்தித்துறை பகுதியில் 521 படைத்தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 50 வீடுகள் மற்றும் 22 காணிகள் இன்று சனிக்கிழமை பொதுமக்களின் கையளிக்கப்பட்டன. 

521ஆவது படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பாதுகாப்பு படைப்பிரிவின் 7ஆவது படைப்பிரிவினால் இன்று காலை இந்த கையளிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. 

521ஆவது படைப்பிரிவின் கேணல் டி.எம்.ரி.பி டிசாநாயக்க வீடுகள் மற்றும் காணிகள் கையளிப்பதற்கான அத்தாட்சி ஆவணத்தினை பருத்தித்துறை பிரதேச செயலர் ஆர்.ரி.ஜெயசீலனிடம் கையளித்தார். 

அதனைத்தொடர்ந்து, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்த வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டன. 

மேற்படி கையளிக்கப்பட்ட வீடுகளை மக்கள் சென்று பார்வையிட்டனர். 

இந்நிகழ்வில், பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சக்கோட்டை பகுதியில் கடமைபுரியம் கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
521 படைப்பிரிவின் கீழிருந்த வீடுகள்,காணிகள் கையளிப்பு Reviewed by Author on November 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.