நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்;குட்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்; அரைக்கும் ஆலை அமைச்சர்களினால் திறந்து வைப்பு –படங்கள்
நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு செம்மண்தீவு கிராம மாதர் அபிவிருத்திச் சங்கங்களின் சமாச மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை நானாட்டான் பிரதேச கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் சமாசம் ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக கல்வி,கலாசார பண்பாட்டு,விளையாட்டு,இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் கடற்றொழில்,போக்குவரத்து,கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் கலந்து கொண்டனர்
சிறப்பு விருந்தினர்களாக நானாட்டான் பிரதேச செயலாளர் சி.ஏ.சந்திரையா, முன்னைநாள் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.திருஞானசம்பந்தர் மற்றும் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் ஏ.அன்புராஜ் லெம்பேட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அமைச்சர்களினால் அரைக்கும் ஆலை சம்பிரதாயபூர்;வமாக திறந்துவைக்கப்பட்டது. அதன்பின் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களால் அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.
அதேபோன்று பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு (07) மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு பணத்தொகை அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வின் போது தேசிய மட்டத்தில் உயரம் பாய்தல் விளையாட்டுப்போட்டியில் 2ம் இடத்தினை பெற்று கொண்ட மன்.நானாட்டான் மகாவித்தியாலய மாணவன் செல்வன். அன்று டிலக்சன் கௌரவிக்கப்பட்டதுடன் உயரம் பாய்தல் விளையாட்டிற்கு தேவையான பாதணியும் அதிதியினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 20 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு குறித்த மாணவர்களுக்கு ரிதிரேகா வங்கி கணக்கிற்கான சான்றிதள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை தையல் பயிற்ச்சி பெற்ற பயனாளிகள் தொடர்ந்து பயிற்சி சிறந்த முறையில் மேற்கொள்ள சிக் சற் தையல் இயந்திரங்கள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டது.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்;குட்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்; அரைக்கும் ஆலை அமைச்சர்களினால் திறந்து வைப்பு –படங்கள்
Reviewed by Author
on
November 09, 2013
Rating:
No comments:
Post a Comment