இந்தியாவில் சட்டத்தரணிகள் போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகள், திடீரென்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோரின் படங்கள் கட்டப்பட்ட உருவபொம்மைக்கு தீமூட்டியள்ளனர்.
இப்போராட்டம் காரணமாக நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக புதன்கிழமை (6) பதற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அரியலூரில் வழக்கறிஞர்கள் சங்க அவசர கூட்டம் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் தலைமையில் புதன்கிழமை நடந்ததுள்ளது. இதன்போது, பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் அவரது தலைமையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக தபால் நிலையத்துக்கு சென்று, அலுவலகத்துக்கு பூட்டு போட்டு மூடும் போராட்டத்தை நடத்த முயன்றுள்ளனர்.
இதன்போது, பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 19 சட்டத்தரணிகளை கைதுசெய்துள்ளனர்.
மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது, இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி மாணவர்கள் முழக்கமிட்டுள்ளனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.
இதேபோல், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், தமிழின உணர்வாளர்கள், கூட்டமைப்பினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்தியாவில் சட்டத்தரணிகள் போராட்டம்
Reviewed by Author
on
November 07, 2013
Rating:

No comments:
Post a Comment