அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் அரச தமிழ் கலவன் பாடசாலையின் உயர்தர மாணவர்கள் உறவுப்பாலம் என்னும் நிகழ்ச்சியின் மூலம் கேகாலை பயணம் -படங்கள்


மாணவர்களிடையே நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு ஒருமைப்பாடு என்பனவற்றை வலுப்படுத்தும் முகமாக உறவுப்பாலம் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மன்னாரில் இருந்து மாணவர் குழு ஒன்று இன்று வியாழக்கிழமை காலை கேகாலை பயணமாகியது

இன்று காலை புறப்பட்ட உறவுப்பால மாணவர்கள் குழு எதிர்வரும்  மூன்று தினங்கள் (7-9)   கேகாலையில் தங்கியிருந்து குறித்த பகுதியில் உள்ள சகோதர மாணவ உறவுகளுடன் நல்லிணக்கம் ,புரிந்துணர்வு மற்றும் ஒருமைப்பாடு போன்ற விடயங்களை எதிர்காலத்தில் சிறந்த முறையில் மாணவர்களிடையே எடுத்து சென்று சிறந்த எதிர்கால மாணவ சமூதாயத்தை உருவாக்க தேவையான விழிப்புணர்வு மற்றும் பல முன்னேற்றகரமாண நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இதன்படி குறித்த மூன்று நாட்களும் கலை,கலாசார,விளையாட்டுகளின் மூலம் தெற்கு சகோதர இன மாணவர்களுடன் பழகி இன நல்லுறவை மாணவர்களிடையே மேம்படுத்தும் பல நிகழ்வுகளில் பங்கு பெறவுள்ளனர்.

இதன் மூலம் ஒரே நாடு ஓரே மக்கள் என்னும் தொனிப் பொருளிலான உணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தி இனங்களிடையே மெழிரீதியான  வேறுபாடுகளை களைந்து மாவணசமூதாயத்தை சமாதானம் ,சகிப்புத்தன்மை, இன நல்லுறவு போன்ற விடயங்களை மாணவர்கள் மத்தியில் முன்னெடுத்து செல்ல ஏதுவாக இன் நிகள்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்து.

குறித்த நிகழ்வுகளில் தலைமன்னார் அரச தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த 20 மாணவர்களும் 20 மாணவிகளும் பங்குபற்றவுள்ளனர்.
இதற்காண பயண ஒழுங்குகளை தலைமன்னார் பொலிஸ் தலைமை பொறுப்பதிகாரி ஜமீல் ஒழுங்குபடுத்தி கொடுத்துள்ளார்.

இன் நிகள்வின் ஆரம்ப நாளான இன்று காலை மன்னார் வலயகல்வி அலுவலகத்தில் முன் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றிய வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் குறித்த மாணவர்களை வழியனுப்பிவைத்தார்
.இதன் போது தலைமன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி ஜமீல் ,தலைமன்னார் பாடசாலையின் அதிபர் செல்வரஞ்சன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு குறித்த மாணவர்களுடன் கேகாலை  பயணமாகினர்.




















தலைமன்னார் அரச தமிழ் கலவன் பாடசாலையின் உயர்தர மாணவர்கள் உறவுப்பாலம் என்னும் நிகழ்ச்சியின் மூலம் கேகாலை பயணம் -படங்கள் Reviewed by Author on November 07, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.