காணாமல் போனோர்களின் உறவுகளின் கண்ணீரை அலட்சியப்படுத்திய காவல் துறையினர் :சகாயம் மன்னார் பிரஜைகள்குழு உப தலைவர்
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கடந்த 15ம் திகதி; யாழ் நகருக்கு விஜயம் செய்திருந்த வேளை காணாமல் போனோர்களின் உறவுகளினால் கவனயீர்ப்;பு போராட்டம் ஒன்றினை மன்னார் பிரஜைகள் குழுவின் தலைமையில் யாழ் நூலகம் முன்பாக நடத்திய போது அங்கு கடமையில் இருந்த பொலிஸார் காணாமல் போனோரின் உறவினர்களின் கண்ணீரை அலட்சியப்படுத்தியுள்ளதாக மன்னார் பிரதேச சபையின் உப தலைவரும்,மன்னார்; பிரஜைகள் குழுவின் உப தலைவருமான அந்தோனி சகாயம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி இம்மானுவேல் செபமாலை ,அருட்பணி ஞானராஜ் குருஸ் அவர்களும் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின்; இனைப்பாளர் அ.சுனேஸ் சோசை உட்பட மன்னாரில் இருந்து காணாமல் போனோரின் உறவுகள் 30 பேருடன் நானும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றோம்.
இந்த நிகழ்வானது பிரதமர் டேவிட் கமரூன் அவர்களுக்கு காணாமல் போனவர்களது உறவினர்களினால் மகஜர் கொடுப்தற்காக வவுனியா, யாழ்பாணம் ,முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கு மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவுகள் கலந்து கொன்டனர்.
-அன்றைய சுமார் 11 மணியிலிருந்து இங்கிலாந்து பிரதமரின் வருகைக்காக யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள முனிஸ்வரர் ஆலயத்தில் காத்து நின்ற காணாமல் போனோரின் உறவுகள் 2 மணியளவில் பொது நூலகத்திற்கு முன்பாக மிகவும் அமைதியான முறையில் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி நடை பெற்றுக்கொண்டிருக்கும் பொது நலவாய மாநாட்டின் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற வகையில் பதாதைகள் மற்றும் கோசங்களை எழுப்பியவண்ணம் தீபங்களை ஏந்தி தங்கள் எதிர்ப்பினையும் காணாமல் போனோரின் இறுதி முடிவு என்ன என்ற கேள்வியோடும் கண்ணீர் மல்க காத்திருந்த வேளை பல வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் உள்நாட்டு ஊடகவியலாளர்களும் மக்களின் துயரங்களை பதிவு செய்த தருணம் டேவிட்கமரூன் யாழ் நூலகத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரை சந்தித்த வேளை மக்கள் டேவிட் கமரூனை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காதா என்று எதிர்பார்த்திருந்த மக்கள் நூலகத்தின் முன்பாக செல்ல முயற்சித்த போது சீருடை அணிந்த காவல் துறையினர் பெண்களையும், ஆண்களையும், சிறுவர்களையும் , அநாகரிகமான முறையில் அடாவடித்தனமாக தாக்கினர் .
இச்சந்தர்ப்பத்தின் போது யாழ் நூலக மேல்மாடியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவர் உட்பட டேவிட் கமரூன் ,சுமந்திரன் ,முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் காவல் துறையினர் மக்களை தாக்கியதை இவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
தாக்கிய சந்தர்ப்பத்தில் அருட்பனி நிக்சன் ,அருட்பணி செபமாலை ,மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இனைப்பாளர் அ. சுனேஸ் சோசை ,வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ,போன்றோறையும் பிடித்து கீழே தள்ளி; அநாகரிகமான முறையில் பொலிஸார் நடந்து கொன்டனர்.
இவர்களது அடக்கு முறையையும் மீறி சனல் 4 வின் ஊடகவியளாளர்கள் மக்களின் துயரங்களை பதிவு செய்தனர் .
பெரும் அமளி துமளியோடு யாழ் நூலக நுழைவாயிலின் முன்பதாக அமர்ந்திருந்த வேளை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவருடைய வாகணத்தில் நூலகத்தின் உள்ளிருந்து வந்து நூலகத்தை விட்டு வெளியேறிய போது மக்கள் அவரை மறித்து எங்களுக்கு ஒரு முடிவை கூறுங்கள் என்று கதறியழுத போதும் அதனை பொருட்படுத்தாமல் வாகணத்தை விட்டு இறங்காமல் நூலக பின் வாயில் வழியாக சென்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலுக்கு பின்னாவது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மக்களோடு ஒன்றினைந்து செயற்படுவார்கள் என்ற எதிர்பார்;ப்;பையும் மக்கள் மத்தியில் இல்லாமல் செய்திருக்கிறது.
காணாமல் போனோர்களின் இறுதி முடிவை பற்றியதானஅரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையினை சர்வதேசத்தின் முன்னிலையில் இலங்கை அரசாங்கம் தெளிவாக மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது என்று நான் கருதுகின்றேன் .
மேலும் அரசியல் இலாபத்திற்காக மட்டுமே பதவிக்கு வரும் தமிழ் அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலைகளை சற்று புரிந்து கொள்ள வேண்டும்.
உலகத் தலைவார்கள் ஒன்றுகூடியிருக்கும் பொதுநலவாயமாநாட்டில் இலங்கையின் அபிருத்தியையும் அழகையும் காட்டி சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை அரசு தமிழ் மக்களின் அவல வாழ்கையை சொல்ல மறுக்கின்றது.
இவ்வாறான அரசாங்கத்தின் செயலை வண்மையாக கண்டிப்பதோடு தமிழ் தலைவர்களின் அசமந்தபோக்கு மிகவும் கவலையளிக்கும் விடயமாக மாறியுள்ளது.என குறித்;த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணாமல் போனோர்களின் உறவுகளின் கண்ணீரை அலட்சியப்படுத்திய காவல் துறையினர் :சகாயம் மன்னார் பிரஜைகள்குழு உப தலைவர்
Reviewed by Author
on
November 20, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment